Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மென்பந்தாட்ட போட்டியில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணி சாதனை

மென்பந்தாட்ட போட்டியில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணி சாதனை

வடமராட்சி கிழக்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நடாத்திய மென்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

வடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கி விலகல் முறையில் ஆரம்பமான மென்பந்தாட்டத் தொடரில் இறுதிப் போட்டியில் நேற்று (04)குடத்தனை பொற்பதியை எதிர்த்து கட்டைக்காடு சென் மேரிஸ் அணி மோதியது

குறித்த இறுதி போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றி பெற்று கட்டைக்காடு சென்மேரிஸ் அணி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது

இறுதி போட்டியின் பின்பு போட்டியை நடாத்தும் கழகமான செல்வா விளையாட்டு கழகத்துடன் இறுதிப் போட்டியில் கிண்ணத்தை வெற்றி கொண்ட கட்டைக்காடு சென் மேரிஸ் அணி சவால் கிண்ணத்துக்காக போட்டி போட்டது

இந்த இறுதிப் போட்டியிலும் செல்வா விளையாட்டு கழகத்தை வீழ்த்தி கட்டைக்காடு சென் மேரிஸ் அணி சாம்பியன் ஆனது. இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக கிருசாந் தெரிவு செய்யப்பட்டார்

வெற்றிக் கிண்ணம் மற்றும் சவால் கிண்ணத்தை கைப்பற்றிய கட்டைக்காடு சென்மேரிஸ் அணியினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

(மரியசீலன் -திலைக்ஸ்
வடமராட்சி நிருபர்)

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments