Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பதவி இடைநீக்கம்!

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பதவி இடைநீக்கம்!

சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் தனது கணவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் (Joani Reid) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இடைநீக்கம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஜோனி ரீட், தனது கணவர் மீதான விசாரணைகள் முடியும் வரை தனாக முன் வந்து பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ததாகவும்,  உள் விசாரணைகள் முடியும் வரை தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக அமரப் போவதில்லை என்றும் கூறினார்.

அதேநேரம், இந்த விவகாரங்களில் தொழிற்கட்சியின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க ஜோனி ரீட் ஒப்புக்கொண்டுள்ளார் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜோனி ரீட்டின் கணவர் டேவிட் டெய்லர் சீனாவின் வெளிநாட்டு உளவுத்துறை சேவைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கடந்த புதன்கிழமை லண்டன் மற்றும் வேல்ஸில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களில் ஒருவராக உள்ளார்.

வழக்கமான இங்கிலாந்து காவல்துறை நடைமுறையின்படி, கைது செய்யப்பட்ட ஏனைய நபர்களின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments