Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பாரசீக வளைகுடாவில் ஈரான் அமெரிக்க எண்ணெய் கப்பலை தாக்கியதாக தெரிவிப்பு!

பாரசீக வளைகுடாவில் ஈரான் அமெரிக்க எண்ணெய் கப்பலை தாக்கியதாக தெரிவிப்பு!

இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் தாக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர், வடக்கு பாரசீக வளைகுடாவில் ஒரு அமெரிக்க டேங்கரைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியுள்ளது.

கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டு தீப்பிடித்ததாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்தக் கூற்று இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கடற்படை போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கிய 24 மணி நேரத்திற்குள் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

போரின் போது ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்றும் ஈரான் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments