Tuesday, September 15, 2026
spot_img
Homeபொது செய்திகள்iOS 27-ல் புதிய AI அம்சங்கள்

iOS 27-ல் புதிய AI அம்சங்கள்

iOS 27 அப்டேட்டில் புதிய சீரி ஏஐ மற்றும் விஷுவல் இண்டலிஜென்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் iOS 27 அப்டேட்டில் புதிய சீரி ஏஐ அம்சம் முக்கிய கவனம் பெற்றுள்ளது.

ஆப்பிளின் சொந்த ஏஐ மாடல்கள் மற்றும் கூகுளின் ‘ஜெமினி’ தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சீரி, பயனரின் தனிப்பட்ட சூழலைப் புரிந்துகொண்டு பல்வேறு செயலிகளிலிருந்து தகவல்களைத் திரட்டும் திறனை பெற்றுள்ளது.

மேலும், கோப்புகளை மாற்றியமைத்தல் மற்றும் சிக்கலான கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்தல் உள்ளிட்ட பணிகளையும் சீரி மூலம் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட விஷுவல் இண்டலிஜென்ஸ்

இதேவேளை, ஐபோனின் ‘விஷுவல் இண்டலிஜென்ஸ்’ அம்சமும் iOS 27 இல் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கேமரா மூலம் பொருட்களை அடையாளம் காண்பதுடன், அவை தொடர்பான கேள்விகளுக்கு சீரி ஊடாக பதில் பெறவும், அதற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.

அத்துடன், ஐபோன் திரையில் காணப்படும் தகவல்களைப் புரிந்துகொண்டு பயனருக்கு தேவையான உதவிகளை வழங்கும் திறனும் இந்த புதிய அம்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments