Wednesday, March 11, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ரஷ்ய - உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு - ஐரோப்பிய ஆணையம்

ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு – ஐரோப்பிய ஆணையம்

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக, ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியா கோஸ்டா ஆகியோர் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘நாங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினோம்.

உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை மிகவும் வரவேற்கிறோம்.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதிலும், அமைதிக்கான பாதையை உருவாக்குவதிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தப் போர் உலக பாதுகாப்பை கெடுப்பதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கிறது. எனவே இது முழு உலகிற்கும் ஒரு அச்சுறுத்தலாகும்.

2026ம் ஆண்டின் தொடக்கத்தில், அடுத்த ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உச்சி மாநாட்டில் ஒரு கூட்டு மூலோபாய நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், இந்த ஆண்டின் முடிவுக்குள் தடையில்லா வர்த்தக பேச்சுவார்த்தைகளை இறுதி செய்ய நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள் >>>

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல – இந்திய ஒன்றிய அரசு

புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை 22-ம் தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன்: அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments