Tuesday, March 10, 2026
spot_img
HomeUncategorizedஇந்தியா, சீனாவுக்கு அதிக வரி விதிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு

இந்தியா, சீனாவுக்கு அதிக வரி விதிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு

இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை உக்ரேன் போரில், ரஷ்யா பயன்படுத்துவதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றது.

இந்த நிலையில், இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அந்தவகையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அழுத்தம் தர இந்திய மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் எனவும் குறிப்பாக சீனாவுக்கு 100% வரி, இந்தியாவுக்கு அதிகபட்ச வரி விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments