நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அந்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டங்களே இந்த முடிவிற்கு காரணமாகும். நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு நேற்று (09) இரவு 10.00 மணி முதல் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நேபாள இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், சில குழுக்கள் நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு கொள்ளை, தீ வைப்பு, சொத்து அழிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேபாள அரசாங்கம் சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.


