Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காவல் நிலையத்தில் வெடித்த துப்பாக்கி:

காவல் நிலையத்தில் வெடித்த துப்பாக்கி:

அம்பலாங்கொடை காவல் நிலையத்தில் இன்று (24) மதியம் துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் ஒரு காவல் அதிகாரி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த அதிகாரி பணிக்கு சமூகமளிக்க வந்த ஒரு கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகிறது.

கான்ஸ்டபிள் பணிக்கு சமூகமளித்த பின்னர் தனது துப்பாக்கியை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, ​​திடீரென துப்பாக்கி வெடித்ததாக கூறப்படுகிறது.

அதன்போது, அவரது காலில் குண்டு பாய்ந்த நிலையில், உடனடியாக பலபிட்டிய ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments