Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்காவில் திரைப்பட இயக்குனர் மனைவியுடன் சடலமாக மீட்பு!

அமெரிக்காவில் திரைப்பட இயக்குனர் மனைவியுடன் சடலமாக மீட்பு!

பிரபல அமெரிக்க இயக்குநரும், நடிகருமான ராப் ரெய்னர் தனது மனைவியுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

When Harry Met Sally முதலான பல திரைப்படங்களை இயக்கியவரும், பல திரைப்படங்களில் நடித்தவருமான ராப் ரெய்னர் (78), தனது மனைவியான மிஷெல் சிங்கர் ரெய்னருடன் (68)அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சிலுள்ள தனது வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை( 14) சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர்கள் இருவரும் கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். உலக அளவில் மிகவும் பிரபலமான திரைப்படம், When Harry Met Sally.

அந்த திரைப்படத்தை இயக்கும்போதுதான் புகைப்படக்கலைஞரான மிஷெலை சந்தித்தார் ராப்.

மிஷெலின் பரிந்துரையின்படி திரைப்படத்தில் கிளைமாக்சை மாற்றியதுடன், சில ஆண்டுகளுக்குப் பின் அவரையே காதலித்து, திருமணமும் செய்துகொண்டார் ராப்.

குழந்தைகள் நலன் மற்றும் கல்வி தொடர்பிலான திட்டங்கள் உருவாகக் காரணமாக இருந்த ராப், புகை பிடித்தலுக்கு எதிரான பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments