Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சிறுவர் பாதுகாப்புக்கான புதிய சட்டம் உருவாக்கம்!

சிறுவர் பாதுகாப்புக்கான புதிய சட்டம் உருவாக்கம்!

இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கான பெற்றோர் பாதுகாவலர் பற்றிய முறைசார்ந்த சட்டரீதியான ஏற்பாடுகள் இதுவரை இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்குவதற்காக கருத்தாக்கப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

இதன் மூலம், பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு முறையை நிறுவுதல் மற்றும் தொலைதூரப் பெற்றோர் பாதுகாவலர் ஒத்துழைப்புகள் எனும் இரண்டு முக்கிய வழிகளில் பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்புக்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த சட்டமூலம் ஒன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கான யோசனையை, பதில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments