Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டித்வா அனர்த்தம்: வீட்டு வாடகை கொடுப்பனவு காலம் அதிகரிப்பு

டித்வா அனர்த்தம்: வீட்டு வாடகை கொடுப்பனவு காலம் அதிகரிப்பு

டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக 2025.12.05 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த திடீர் அனர்த்த நிலைமை காரணமாக ஆகக்கூடிய பாதிப்புக்குள்ளான சில மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்ந்து பார்க்கும் போது,

இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக பின்வரும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

 வீடுகளை இழந்து குடியிருப்பதற்கு வீடற்றவர்கள் தமது வீட்டை நிர்மாணிக்கும் வரை ஒரு இடத்தில் தற்காலிகமாக குடியமர்வதற்காக ஆகக்கூடியது 06 மாதங்கள் வரை வழங்கப்படும் மாதாந்த வீட்டு வாடகை கொடுப்பனவை

ஆகக் கூடியது 09 மாதங்கள் வரை நீடிக்கும் வகையில் தேவையான சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுதல்.

 கற்கள், மண் மற்றும் சிதைவுகள் சேர்ந்ததனால் அழிவடைந்துள்ள வயல்களை மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் தயார்படுத்துவதற்காக

மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர்கள்ஃஉதவி ஆணையாளர்களால் அங்கீகாரம் வழங்கப்படும செலவு மதிப்பீட்டுக்கமைய தொடர்புடைய நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற பின்னர்

மேற்குறித்த சிதைவுகளை அகற்றி மீண்டும் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற வகையில் தயார் செய்வதற்கு உரிய சுற்றறிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்.

 கற்கள், மண் திட்டுக்கள் மற்றும் இடிபாடுகள் வீழ்ந்த இடங்கள் அல்லது மண்சரிவு ஆபத்துக்கள் நிலவுகின்ற இடங்களில் மண்சரிவு ஆபத்துகளை குறைப்பதற்கான செயற்பாடுகளை

தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் விதந்துரைக்கமைய மேற்கொள்வதற்காக

பாதுகாப்பு அமைச்சின் கீழ் மண்சரிவுகளை தணிக்கும் வேலைத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை முன்னுரிமையுடன் பயன்படுத்தல்.

 தேவையான ஒதுக்கீடுகளை பொருத்தமான வகையில் அனர்த்த நிவாரண மற்றும் புனரமைப்புக்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை திறைசேரி மூலம் ஏற்பாடு செய்தல்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments