கூகுள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நேரில் அவதானித்ததாகக் கூறிய பிலால் சுஹ்தாய், அதன் தற்போதைய வேகம் குறித்து பகிரங்கமாக கவலை தெரிவித்துள்ளார்.
தனது ராஜினாமா தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், AI தொழில்நுட்பம் மனித இனத்திற்கே பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலையை எட்டியுள்ளதாக எச்சரித்துள்ளார்.
2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒப்பீட்டளவில் சாதாரண நிலையில் இருந்த AI தொழில்நுட்பம், கடந்த நான்கு ஆண்டுகளில் எதிர்பார்க்க முடியாத வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் அளவுக்கு AI-யின் திறன் அதிகரித்து வருவதாகவும், இதனால் ஏற்படக்கூடிய பேரழிவைத் தடுப்பதற்கான கால அவகாசம் வேகமாக குறைந்து வருவதாகவும் பிலால் சுஹ்தாய் தெரிவித்துள்ளார்.


