திருகோணமலையில் மொரவெவ வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.
இவர் மொரவெவ வனப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


