Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை!

மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் என்பவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல இன்று செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் என்பவரை 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் என்பவருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments