Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இங்கிலாந்துக்கு அபராதம்: இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி - மைக்கெல் வாகன் குற்றச்சாட்டு

இங்கிலாந்துக்கு அபராதம்: இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி – மைக்கெல் வாகன் குற்றச்சாட்டு

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் (181 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்த நிலையில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தால் போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2 புள்ளிகள் இங்கிலாந்து அணிக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பா அவர் கூறியதாவது ,

நான் நேர்மையாக ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகின்றேன். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளுமேதான் ஓவர்களைக் குறைவாக வீசினார்கள். இந்த விஷயத்தில் இரண்டு அணிகளுமே தவறு செய்தது. ஆனால் ஒரு அணிக்கு மட்டும்தற்போது அபராதம் விதிக்கப்பட்டிருப்பது என்னால் நம்பவே முடியவில்லை.என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments