தேர்தல் ஆணையகத்தினால் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தொடக்கம் 2029 ஆம் ஆண்டுக்கான பங்கேற்பு மூலோபாயத்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (02) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்கள உத்தியோத்தர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவன உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்புகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.
இதன்போது தேர்தல் ஆணையாளர், மாவட்ட செயலாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆகியோரினால் தேர்தல் தொடர்பாகவும் வாக்குரிமை உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டன.
இதன் பின்னர் பங்கேற்றிருந்தவர்களிடமிருந்து எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தொடக்கம் 2029ஆம் ஆண்டுக்கான மூலோபாயத்திட்டத்தில் சேர்க்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக முன்மொழிவுகளும் ஆலோசனைகளும் பெறப்பட்டன.


