Thursday, March 19, 2026
spot_img
Homeபொது செய்திகள்குழாய் பதிக்கும் பணியின்போது மண் சரிந்து விபத்து; 4 பேர் பலி

குழாய் பதிக்கும் பணியின்போது மண் சரிந்து விபத்து; 4 பேர் பலி

குஜராத் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ஜன்கி கா நக்லா கிராமத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், குடிநீர் குழாய் பதிப்பதற்காக இன்று காலை தொழிலாளர்கள் குழி தோண்டியுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக மண் சரிந்துள்ளது. இந்த மண் சரிவில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சக தொழிலாளர்கள், கிராமத்தினர், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

மண் சரிவில் சிக்கிய 11 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த மண் சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments