Monday, June 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ரஷியாவில் மேற்கத்திய நாடுகள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கின்றன – அதிபர் புதின் குற்றச்சாட்டு

ரஷியாவில் மேற்கத்திய நாடுகள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கின்றன – அதிபர் புதின் குற்றச்சாட்டு

பெலாரசில் நடந்த யூரேசியன் பொருளாதார ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்கேற்ற ரஷிய அதிபர் புதின், இடையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேற்கத்திய நாடுகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் கூறும்போது, ‘ரஷியாவுக்கு எதிராக செயல்படும் ஐ.எஸ். குறித்து யாரும் கவனிப்பதில்லை. மாஸ்கோவில் குண்டு வெடிப்பு போன்றவை இன்றும் நடக்கிறது. இதில் யாரும் கவனம் செலுத்த விரும்புவதில்லை. ரஷியாவுக்கு எதிரானது என்றால் அவர்களுக்கு எல்லாம் நல்லதாக தெரிகிறது’ என சாடினார். மேலும் அவர், ‘எங்கள் நாட்டில் பிரிவினைவாதத்தை மேற்கத்திய நாடுகள் ஊக்குவித்தபோதும், பயங்கரவாதம் போன்ற ரஷியாவுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு கருவியாகவும் இது நடந்தது. நேட்டோ விரிவாக்கம் மற்றும் உக்ரைன் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் மூலம் மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைக்கின்றன’ என்றும் குற்றம் சாட்டினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments