Wednesday, March 18, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான்

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான்

இஸ்ரேல்-ஈரான் இடையே 12 நாட்களாக நடந்த போர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையீட்டின்பேரில் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், நெதர்லாந்து நாட்டில் ‘நேட்டோ’ மாநாட்டில் பங்கேற்ற டிரம்பிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். ”அமெரிக்க தாக்குதலில் ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளதா?” என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு கோபம் அடைந்த டிரம்ப், ”உளவுத்துறை தகவல் இறுதியானது அல்ல. ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அதை சரிப்படுத்த பல ஆண்டுகள் ஆகும்” என்று கூறினார்.”ஈரான் மீண்டும் அணுஆயுத உற்பத்தி பணியில் ஈடுபட்டால், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்துமா?” என்று கேட்டதற்கு, டிரம்ப் ”நிச்சயமாக” என்று பதில் அளித்தார்.அதே சமயத்தில், அணுசக்தி திட்டங்களை கைவிட மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. ஐ.நா. சர்வதேச அணுசக்தி முகமையுடன் ஒத்துழைப்பதை நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த உள்ளது. இதற்கிடையே, ஈரானும் அணுசக்தி நிலைய சேதத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தநிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின் முதல்முறையாக ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி பேசியதாவது: அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம். ஈரானை தொட நினைத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும். கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை தாக்கி பதிலடி கொடுத்துள்ளோம். எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு, பாடம் புகட்டியுள்ளோம். தற்போதைய போரில் அமெரிக்காவுக்கு எந்த பலனும் இல்லை. இஸ்லாமிய குடியரசு வெற்றி பெற்றது. மீண்டும் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை செய்தால் எதிரி நிச்சயம் அதிகவிலை கொடுக்க நேரிடம். தேவைப்பட்டால் இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் நிகழலாம். கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலை குறிப்பிட்டு காமேனி பேசினார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments