Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மொரட்டுவை பகுதியில் கடலுக்குச் சென்று மாயமான இரு மீனவர்களின் சடலங்கள் மீட்பு

மொரட்டுவை பகுதியில் கடலுக்குச் சென்று மாயமான இரு மீனவர்களின் சடலங்கள் மீட்பு

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன இரு மீனவர்களின் சடங்கள் இன்று செவ்வவாய்க்கிழமை(17) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

மொரட்டுவை எகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் மீனவ துறைமுகத்துக்கு அருகில் திங்கட்கிழமை (16) மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மீள கரைக்கு திரும்பியிருந்த நிலையில், கடல் அலை சீற்றம் காரணமாக குறித்த மீனவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தை அடுத்து கடற்படையினரின் உதவியுடன் நீரில் மூழ்கி காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மீனவர்களின் சடலங்கள் மொரட்டுவை கடற்கரை பகுதியில் கரையொதுங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. படகு கவிழ்ந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

39 மற்றும் 52 வயதுடைய மொரட்டுவை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பிரதே பரிசோதனைக்காக சடலங்கள் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் எகொடஉயன பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments