தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான மனு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு ஜனத் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று புதன்கிழமை (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


