Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை

கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தின. நேற்று முன்தினம் இரவு முதலே கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை கொட்ட தொடங்கியது. விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை நேற்றும் நீடித்தது.

இந்த நிலையில் அதிகனமழை வரை பதிவாகும் என்பதால் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் (திங்கட்கிழமை) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments