Saturday, June 14, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

2023-2025 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி அடுத்த மாதம் 11-15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.

அதேவேளையில், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும். இந்த போட்டி நிறைவடைந்ததும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி, வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டனாக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக ஒதுங்கி இருந்த ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மேத்யூ குன்னமென், மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments