கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள வீட்டில் முன்னாள் டி.ஜி.பி. ஓம் பிரகாஷ் கத்திக்குத்து காயங்களுடன் மரணம் அடைந்து கிடந்துள்ளார். அவரை யாரோ கொடிய ஆயுதங்களால் தாக்கி, படுகொலை செய்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவருடைய வயிறு மற்றும் கழுத்து பகுதிகளில் காயங்கள் காணப்பட்டன.
இந்நிலையில், மனைவி கைது மற்றும் மகளை போலீசார் பிடித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்ட விசாரணை முடிவில், மனைவி ஒரு குற்றவாளி என தெரிய வந்துள்ளது கூறப்படுகிறது. பெங்களூரு காவல் ஆணையாளர் தயானந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த சம்பவம் பற்றி பிரகாஷின் மகன் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில், எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. விரிவான விசாரணை நடத்தப்படும் என அவர் கூறினார்.
1981-ம் ஆண்டு கர்நாடகாவில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியான ஓம் பிரகாஷ், 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். போலீஸ் ஐ.ஜி.யாகவும் பணியாற்றி இருக்கிறார். பீகாரின் சம்பரான் மாவட்டத்தில் இருந்து வந்த அவர் முதுநிலை அறிவியல் படிப்பை முடித்திருக்கிறார். முழு விசாரணைக்கு பின்னரே அவருடைய மரணத்திற்கான காரணம் பற்றிய விவரம் தெரிய வரும்.