Tuesday, June 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இராஜாங்கனையில் தந்தை, மகன் கொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

இராஜாங்கனையில் தந்தை, மகன் கொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

அநுராதபுரம் – இராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நொச்சியாகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (15) நொச்சியாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

27 மற்றும் 23 வயதுடைய இரண்டு சகோதரர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தையும் 26 வயதுடைய மகனும் கடந்த 12 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் இராஜாங்கனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments