யூடியூபில் விஜே சித்து விலாக்ஸ் (vj siddhu vlogs) மூலம் பிரபலமானவர் விஜே சித்து. சின்னத்திரை தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர் சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பிரபலமானவராக இருக்கிறார்.
அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பில் விஜே சித்து புதிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜே சித்து குழுவைச் சேர்ந்த ஹர்ஷத் கான் என்பவர் டிராகன் படத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.