Sunday, March 15, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழகம் விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தமிழ்நாட்டில் புதிதாக 7000 தெர்மல் பிளான்ட் மூலம் மின்சாரம் உற்பத்தி, 14 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி, 2000 பேட்டரி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. .எங்காவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்பட்ட மின்தடை உடனே சரி செய்யப்பட்டு இருக்கும்.பொதுமக்கள் இதுகுறித்து உடனே புகார் கூறினால் மின்சார வாரிய ஊழியர்கள் வந்து நடவடிக்கை எடுத்து சரி செய்வார்கள். இதற்காக மின்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதல்-அமைச்சர் எடுத்து வரும் சீரிய திட்டங்களால் தமிழகம் விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும்.என தெரிவித்துள்ளார். 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments