Sunday, November 29, 2026
spot_img
Homeபொது செய்திகள்தங்க விலை தொடர் சரிவு – 2027இல் மீண்டும் உயருமா?

தங்க விலை தொடர் சரிவு – 2027இல் மீண்டும் உயருமா?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், 2027ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயரக்கூடும் என பொருளாதார கணிப்புகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் மேற்கொள்ளும் முதலீடுகளை குறைத்துள்ளமை, தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அதேவேளை, சர்வதேச பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டொலரின் மதிப்பு மற்றும் மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் ஆகியவை எதிர்கால தங்க விலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக அமையவுள்ளன.

2027ஆம் ஆண்டு இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,650 அமெரிக்க டொலரை எட்டக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதுடன், மீண்டும் உயர்வடைவதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன.

தற்போதைய விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து, தங்கம் வாங்குவதற்கு ஏற்ற வாய்ப்பாக இந்த நிலை அமையலாம் எனவும் முதலீட்டாளர்கள் மத்தியில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments