Sunday, November 29, 2026
spot_img
Homeஉலக செய்திகள்லொஸ் ஏஞ்சல்ஸில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

லொஸ் ஏஞ்சல்ஸில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ், மன்ஹாட்டன் கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, முதல் நிலநடுக்கம் 5.0 ரிச்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் 4.6 ரிச்டர் அளவிலும் பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்று (28) காலை 9.30 மணியளவில் முதல் நிலநடுக்கமும், காலை 11.41 மணியளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளன. முதல் நிலநடுக்கம் மன்ஹாட்டன் கடற்கரைக்கு மேற்கே சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கம் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலும் உணரப்பட்டதுடன், அங்கு சில ஜன்னல்கள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் தரையிறங்க வந்த டெல்டா எயார்லைன்ஸ் விமானம் உள்ளிட்ட சில விமானங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தரையிறங்காமல் மீண்டும் வானில் பறந்தன.

எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உயிரிழப்புகள், காயங்கள் அல்லது பாரிய சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments