90களில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை ரம்பா ஆகியோர் கனடாவில் மீண்டும் சந்தித்துள்ளனர்.
கனடாவின் டொராண்டோ நகரில் வசிக்கும் ரம்பாவின் இல்லத்திற்குச் சென்ற பிரபுதேவா, அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை ரம்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
‘வி.ஐ.பி.’, ‘காதலா காதலா’ உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்த இவர்களின் சந்திப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


