Wednesday, November 25, 2026
spot_img
Homeபொது செய்திகள்சீனாவின் Huawei நிறுவனத்துக்கு எதிராக குற்றசாட்டுகளில் 10 நிரூபணம்

சீனாவின் Huawei நிறுவனத்துக்கு எதிராக குற்றசாட்டுகளில் 10 நிரூபணம்

சீனாவின் தொலைத்தொடர்பு சாதன உற்பத்தி நிறுவனமான ஹுவாவே (Huawei), தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 12 குற்றவியல் குற்றச்சாட்டுகளில் 10 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக (Huawei) அமெரிக்க நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் முன்னெடுத்த வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக வங்கிகளுக்குத் தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக இரகசியங்களைத் திருடச் சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் அடங்குகின்றன.

நியூயோர்க்கின் புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், வங்கி மோசடி, மின்னணு பரிவர்த்தனை மோசடி, தடைகளை மீறியமை மற்றும் வர்த்தக இரகசியங்களைத் திருடச் சதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் ஹுவாவே நிறுவனம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், நீதித்துறை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கச் சதி செய்தமை மற்றும் குற்றவியல் அமைப்பாகச் செயற்பட்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து அந்நிறுவனம் விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை, இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ளது. இதன்போது அரசுத் தரப்பு 60க்கும் மேற்பட்ட சாட்சிகளையும், ஹுவாவே நிறுவனம் சார்பில் 15 சாட்சிகளையும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் ஹுவாவே நிறுவனத்தை வர்த்தகத் தடைப்பட்டியலில் இணைத்திருந்தது. இதனால் அமெரிக்கத் தொழில்நுட்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அந்நிறுவனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த வழக்கில் தண்டனை தொடர்பான உத்தரவை 2027ஆம் ஆண்டு செப்டெம்பர் 14ஆம் திகதி அமெரிக்க மாவட்ட நீதிபதி ஆன் டொனெல்லி அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments