Saturday, November 21, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பலஸ்தீன அதிகாரசபையின் வெளியுறவு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலஸ்தீன அதிகாரசபையின் வெளியுறவு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் மீண்டும் நிகழக்கூடும் என்றும், அதன் விளைவுகள் பிராந்தியம் முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் ஏற்படக்கூடும் என்றும் பலஸ்தீன அதிகாரசபையின் வெளியுறவு மற்றும் வெளிநாடு வாழ் மக்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் வர்சென் அகபெகியன் ஷாஹின் எச்சரித்துள்ளார்.

நேபிள்ஸில் பேசிய ஷாஹின், இஸ்ரேல் பலஸ்தீனத்தின் வரி வருவாயை நிறுத்தி வைத்திருப்பதால், அதிகாரசபை அதன் வருவாயில் வெறும் 20 சதவீதத்தில் மட்டுமே இயங்கி வருவதாகக் கூறினார்.

“நாங்கள் எங்கும் செல்லப் போவதில்லை. எங்கள் மண்ணில் நாங்கள் உறுதியாக நிலைத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

பலஸ்தீன உரிமைகளை அங்கீகரிக்குமாறும், ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேலைப் பொறுப்பேற்கச் செய்யுமாறும், மேலும் ‘இயல்புக்கு மாறானதை இயல்பாக்க வேண்டாம்’ என்றும் ஷாஹின் சர்வதேச சமூகத்தை வலியுறுத்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments