Friday, November 20, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் காரில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தியர்

கனடாவில் காரில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தியர்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், கார் ஒன்றில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் பொலிசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 29ஆம் திகதி, இரவு 10.30 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Langley என்னுமிடத்தில், கார் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைக்க, அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்துள்ளார்கள்.

தீ அணைக்கப்பட்டபின், காருக்குள் மனித உடல் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.

பொலிசார் அந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபர் ஒரு இந்தியர் என்றும், அவரது பெயர் துஷார் ஷர்மா (25) என்றும் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

யாரோ வேண்டுமென்றே ஷர்மாவின் காரை தீவைத்துக் கொளுத்தியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், யார் அதைச் செய்தார்கள், எதனால் அவர் உயிருடன் கொளுத்தப்பட்டார் என்னும் விடயங்கள் கேள்விக்குறியாகவே நீடிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments