Thursday, November 19, 2026
spot_img
Homeகனடா செய்திகள்பியர் பொயிலிவரின் அலுவலகத்தில் 5 மூத்த அதிகாரிகள் இராஜினாமா!

பியர் பொயிலிவரின் அலுவலகத்தில் 5 மூத்த அதிகாரிகள் இராஜினாமா!

எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொயிலிவரின் (Pierre Poilievre) அலுவலகத்தில் இருந்து ஐந்து மூத்த பணியாளர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கொள்கை மற்றும் ஊடகப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய இயக்குநர்கள் உள்ளிட்டோர் இந்த முடிவை எடுத்துள்ளதால், கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைச் செயலகத்தில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆறு இடைத்தேர்தல்களைக் கன்சர்வேடிவ் கட்சி எதிர்நோக்கியுள்ள இந்தச் சூழலில், இந்த ஊழியர்களின் விலகல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கணிப்புகள் சவாலாக இருந்தாலும், பொயிலிவருக்கு எதிராக கட்சியில் எத்தகைய மாற்றுக் திட்டங்களும் இல்லை என்றும், அவர் தொடர்ந்து நாடாளுமன்றக் குழுவின் முழுமையான ஆதரவைப் பெற்றுள்ளார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராஜினாமா செய்யவுள்ள பணியாளர்கள் தாங்கள் பொயிலிவருடன் பணியாற்றியமை பெருமை அளிப்பதாகவும், அடுத்த தேர்தலில் அவரை பிரதமராகத் தேர்ந்தெடுக்கும் இலக்கு இன்னும் சாத்தியமானதுதான் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments