Monday, November 16, 2026
spot_img
Homeகனடா செய்திகள்செயின்ட்-லின்-லாரன்டைட்ஸ் நகரில் வாகன விபத்து: ஒருவர் பலி!

செயின்ட்-லின்-லாரன்டைட்ஸ் நகரில் வாகன விபத்து: ஒருவர் பலி!

கியூபெக் மாகாணத்தின் லானாடியேர் (Lanaudière) பகுதியில் உள்ள செயின்ட்-லின்-லாரன்டைட்ஸ் (Saint-Lin-Laurentides) நகரில் ஏற்பட்ட நேருக்கு நேர் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கியூபெக் மாகாண பொலிஸார் (Sûreté du Québec – SQ) தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை காலை 6 மணியளவில் ரூட் 335 (Route 335) நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக லியோ வீதிக்கும் (Léo Street) சாபுட் வீதிக்கும் (Chaput Street) இடையிலான நெடுஞ்சாலைப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது.

வாகனமொன்று வீதியை விட்டு விலகி, எதிரே வந்த எஸ்.யு.வி (SUV) ரக வாகன    த்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த எஸ்.யு.வி வாகனத்தின் சாரதி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய வாகனத்தில் பயணித்த இரு பயணிகளும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டிருந்த போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது இரத்தத்தில் உள்ள மதுவின் அளவு பரிசோதிக்கப்படவுள்ளதுடன், விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கியூபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments