Monday, November 16, 2026
spot_img
Homeகனடா செய்திகள்வாகனங்கள் குறித்து எச்சரிக்கை

வாகனங்கள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் ஹொண்டா மற்றும் அக்யூரா ஆகிய வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டீயரிங் இயக்குவதில் திடீரெனக் கடினத்தன்மை ஏற்படக்கூடிய மென்பொருள் கோளாறு காரணமாக, சுமார் 43,000 ஹோண்டா மற்றும் அக்யூரா வாகனங்களை மீள அழைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2022–2024 MDX மாதிரிகள் மற்றும் 2021–2025 TLX அக்யூரா வாகனங்கள். 2023–2025 பைலட் ஹோண்டா ரக வாகனங்கள் என்பனவே இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளன.

இலத்திரனியல் பவர் ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுப் பிரிவில் ஏற்பட்டுள்ள மென்பொருள் கோளாறு காரணமாக, அந்தத் தொகுதி ‘ஃபெயில்சேஃப்’ நிலைக்குச் செல்லக்கூடும் என மீள அழைப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வாகனத்தைச் செலுத்தும்போது ஸ்டீயரிங்கைத் திருப்புவதற்குத் திடீரென அதிக வலுப் பிரயோகிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும், இது விபத்துக்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் முதன்முதலில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, வெள்ளிக்கிழமை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சாரதிகள் வாகனத்தை இலகுவாகத் திருப்புவதற்கு உதவும் ஒரு பொறிமுறை உதவியாக இது செயற்படுகிறது.

இது குறைந்த வேகத்தில் செல்லும்போது வாகனத்தை இலகுவாகத் திருப்ப அதிக உதவியையும், நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும்போது குறைந்த உதவியையும் வழங்குவதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தையும் மேம்படுத்துகிறது என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்குத் தபால் மூலம் அறிவிக்கப்படும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மென்பொருளைப் புதுப்பித்துக் கொள்வதற்காக வாகனங்களை அருகிலுள்ள விற்பனை முகவர் நிலையங்களுக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தங்களது வாகனத்திற்கு இந்தப் பாதிப்பு உள்ளதா என்பதை அறிந்துகொள்ள, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன அடையாள இலக்கத்தை நிறுவனத்தின் இணையத்தளத்தில் உள்ளிட்டுச் சரிபார்த்துக் கொள்ள முடியும். இந்த இலக்கத்தைச் சாரதி இருக்கைப் பக்கக் கதவு, முன்பக்கக் கண்ணாடி அல்லது வாகனப் பதிவுப் பத்திரத்தில் காணலாம் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments