மொன்றியல் நகரில் அமைந்துள்ள பிரபலமான டியெப் பூங்காவை (Parc Dieppe) புனரமைப்பதற்காக 35 மில்லியன் டொலர் செலவிலான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஹேபிடாட் 67 பகுதிக்குப் பின்னால் அமைந்துள்ள இந்தப் பூங்காவின் ஆற்றங்கரைப் பாதுகாப்புச் சுவர் பல ஆண்டுகளாகச் சிதைவடைந்துள்ளதுடன், சில நடைபாதைப் பகுதிகளும் சேதமடைந்துள்ளன.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சில பகுதிகள் வேலியிட்டு மூடப்பட்டுள்ளன.
இதற்கமைய, பழுதடைந்த தடுப்புச் சுவரை மாற்றியமைத்தல், பழைய உட்கட்டமைப்புகளைப் புதுப்பித்தல் மற்றும் பூங்காவின் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தப் புனரமைப்புப் பணிகள் தற்காலிகமாக 2029ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2031ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்படலாம் என மொன்றியல் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும், தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவதைப் பொறுத்தே திட்டத்தின் இறுதிக் காலக்கெடு தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


