Thursday, November 12, 2026
spot_img
Homeகனடா செய்திகள்‘குட்ஃபுட்’ நிறுவனத்தைக் கைப்பற்றுகிறது ‘ஃப்ரெஷ் ப்ரிப்’!

‘குட்ஃபுட்’ நிறுவனத்தைக் கைப்பற்றுகிறது ‘ஃப்ரெஷ் ப்ரிப்’!

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த மொன்றியலைச் சேர்ந்த பிரபல உணவுப் பெட்டக (Meal kit) நிறுவனமான ‘குட்ஃபுட்’ (Goodfood), வான்கூவரைச் சேர்ந்த அதன் போட்டியாளரான ‘ஃப்ரெஷ் ப்ரிப்’ (Fresh prep) நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்படவுள்ளது. இந்த நிறுவனக் கொள்வனவுச் செயற்பாட்டுக்கு நீதிமன்றமும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஃப்ரெஷ் ப்ரிப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, குட்ஃபுட்டை வாங்குவதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளதாகவும், இந்த விற்பனை ஒப்பந்தம் இந்த வார இறுதியில் அதாவது வெள்ளிக்கிழமையன்று அல்லது அதற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு குறித்த விவரங்களை வெளியிட ஃப்ரெஷ் ப்ரிப் நிறுவனம் மறுத்துவிட்டது.

மொன்றியல் நகரைத் தளமாகக் கொண்டு 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குட்ஃபுட் நிறுவனம், வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே சமைத்து உண்பதற்காக முன்கூட்டியே அளவிடப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் சமையல் குறிப்புகளை (recipes) வழங்கி பிரபலமடைந்தது.

கடந்த கோடைகாலத்தில் கடுமையான நிதிச் சிக்கல்களை எதிர்கொண்ட குட்ஃபுட் நிறுவனம், கியூபெக் உயர் நீதிமன்றத்தில் கடன் பாதுகாப்பு கோரி விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments