Saturday, November 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ட்ரம்ப்பை கொலை செய்யத் திட்டம்?

ட்ரம்ப்பை கொலை செய்யத் திட்டம்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் கார் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்துள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், காரில் இருந்த இளைஞரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர் வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கொலை செய்யும் திட்டத்துடன் அவர் அப்பகுதியில் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, குறித்த காரில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதையடுத்து, குறித்த இளைஞரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments