Saturday, November 7, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் வாகனம் மோதி இரு பெண்கள், இரு சிறுவர்கள் காயம்!

கனடாவில் வாகனம் மோதி இரு பெண்கள், இரு சிறுவர்கள் காயம்!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், ரிச்மண்ட் ஹில்லில் SUV ரக வாகனம் மோதியதில் இரு பெண்களும் இரு சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து வியாழக்கிழமை பிற்பகல் 3.18 மணியளவில் மேஜர் மெக்கன்சி டிரைவ் மற்றும் நியூகிர்க் வீதிகள் சந்திப்பில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாகப் பொலிஸாருக்கு பல அவசர அழைப்புகள் கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிஸாரும் அவசர மருத்துவப் பிரிவினரும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, 7 வயது மற்றும் ஒரு வயதுடைய இரு சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பாதசாரிகள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரொறன்ரோவிலுள்ள அதிர்ச்சி சிகிச்சை மையத்திற்கு (Trauma Centre) கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஏனைய பெண்ணும் இரு சிறுவர்களும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய SUV வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தங்கியிருந்து பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

வாகனம் பாதசாரிகள் மீது மோதியதற்கான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து தொடர்பான காணொளிகள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளின் தகவல்களைப் பொலிஸார் கோரியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments