Thursday, November 5, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஓஹியோ தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி படுதோல்வி!

ஓஹியோ தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி படுதோல்வி!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி தோல்வியடைந்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பொது சுகாதாரத்துறை மருத்துவர் ஏமி ஆக்டன் வெற்றி பெற்று புதிய கவர்னராகத் தேர்வாகியுள்ளார்.

அமெரிக்க அரசியலில் மிகப்பெரிய ஆச்சரியம்

 

கடந்த பல ஆண்டுகளாகக் குடியரசுக் கட்சியின் வலுவான கோட்டையாக இருந்த ஓஹியோ மாகாணத்தில், ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வென்றிருப்பது அமெரிக்க அரசியலில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏமி ஆக்டன் சுமார் 50.5% வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றபோது, விவேக் ராமசாமிக்கு 46.2% வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதன் மூலம் ஓஹியோவின் முதல் பெண் கவர்னர் என்ற வரலாற்றுச் சாதனையையும் ஏமி ஆக்டன் படைத்துள்ளார்.

அதேவேளை விவேக் ராமசாமிக்கு இது முதல் தேர்தல் தோல்வி அல்ல. 2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட விவேக் களம் இறங்கினார்.

டிரம்ப் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களுக்கு எதிராக ஆரம்பத்தில் தீவிர பிரச்சாரம் செய்தார். மேடைகளில் சரளமாகப் பேசி பலரது கவனத்தை ஈர்த்தாலும், ஐயோவா மாகாணத்தில் நடந்த உள்கட்சி வாக்கெடுப்பில் மிகக் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். அதன்பின் அதிபர் போட்டியில் இருந்து விலகி டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்தார்.

அதிபர் கனவு பாதியிலேயே முடிந்த நிலையில், இப்போது தன் சொந்த ஊரான ஓஹியோவிலேயே கவர்னர் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளார் விவேக் ராமசாமி .

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments