Tuesday, November 3, 2026
spot_img
Homeகனடா செய்திகள்மிசிசாகா பல்கலைக்கழகத்தில் பொலிஸ் நடவடிக்கை!

மிசிசாகா பல்கலைக்கழகத்தில் பொலிஸ் நடவடிக்கை!

கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மிசிசாகா வளாகத்தில் பொலிஸார் அவசர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் வளாகத்திலுள்ளவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Peel பிராந்திய பொலிஸார் அங்கு இடம்பெற்று வரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் வளாகத்தில் தங்கியிருப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில், 3330 Residence Road பகுதியில் அமைந்துள்ள McLuhan Court மாணவர் தங்குமிடத்தில் பொலிஸ் நடவடிக்கை இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து இந்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இரவு 11.45 மணியளவில் வெளியிட்ட அறிவிப்பில், மிசிசாகா வீதி மற்றும் Inner Circle பகுதிக்கு அருகிலுள்ள ஒரே குடியிருப்புப் பிரிவுக்குள் சம்பவம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக Peel பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த பகுதியில் இருந்து உடனடியாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் தங்களது இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணி வரையிலும் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு எச்சரிக்கை நடைமுறையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சம்பவத்திற்கான காரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments