Monday, November 2, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திரைக்கு வரும் ஜென்டில்மேன்

33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திரைக்கு வரும் ஜென்டில்மேன்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘ஜென்டில்மேன்’ திரைப்படம், சுமார் 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கடந்த 1993ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான இத்திரைப்படம், அக்காலப்பகுதியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில், குறித்த திரைப்படம் 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, டொல்பி அட்மோஸ் ஒலி அமைப்புடன் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவான திரைப்படம்

பணக்காரர்களிடமிருந்து பணத்தைத் திருடி, ஏழை மாணவர்களின் கல்விக்காகச் செலவிடும் ராபின் ஹூட் பாணியிலான கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் மதுபாலா, சுபாஸ்ரீ, எம்.என். நம்பியார், மனோரமா, ராஜன் பி. தேவ், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

175 நாட்களுக்கும் மேலாகத் திரையரங்குகளில் ஓடி வெற்றிபெற்ற இத்திரைப்படம், இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் அர்ஜுன் இணைந்த முதல் திரைப்படமாகும்.

மேலும், கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசைப் படைப்புகளாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதனிடையே, ஷங்கர் இயக்கத்தில் பின்னர் வெளியான ‘முதல்வன்’ திரைப்படமும் 1999ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments