Saturday, October 31, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கனடா ஒன்றாரியோ மாகாண எம்.பியுடன் சிறீதரன் எம்.பி. சந்திப்பு!

கனடா ஒன்றாரியோ மாகாண எம்.பியுடன் சிறீதரன் எம்.பி. சந்திப்பு!

கனடாவின் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதிக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

லோகன் கணபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பு, மரியாதை நிமித்தமாகவும் நீண்டகால நட்புறவின் அடிப்படையிலும் அமைந்திருந்தது.

இதன்போது, இலங்கையின் மாகாண சபை ஆட்சி முறைமைக்கும் கனடாவின் மாகாண ஆட்சி முறைமைக்கும் இடையிலான ஒப்பீடு, அதிகாரப் பகிர்வின் நடைமுறைச் சாத்தியங்கள், மாகாணங்களின் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக, கனடாவின் கூட்டாட்சி முறைமையின் கீழ் ஒன்றாரியோ உள்ளிட்ட மாகாணங்கள் அனுபவிக்கும் அரசியலமைப்பு ரீதியான அதிகாரங்கள், சட்டவாக்கச் சுதந்திரம், நிர்வாகப் பொறுப்புகள், நிதி அதிகாரங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்துடனான அதிகாரப் பகிர்வு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், நிதி வளங்களின் பகிர்வு, ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள் தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் அதிகாரப் பகிர்வு, மாகாண சுயாட்சி மற்றும் பிராந்திய நிர்வாகத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, கனடாவில் நகரசபை உறுப்பினராகவும் பின்னர் மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றிய லோகன் கணபதி, தமிழ் மக்களின் சமூக மற்றும் பண்பாட்டு அடையாளங்களை அங்கீகரிப்பதில் ஆற்றிய பங்களிப்புகளை சிறீதரன் எம்.பி. பாராட்டியுள்ளார்.

குறிப்பாக, கனடாவின் மார்க்கம் பகுதியில் ‘வன்னி வீதி’ எனப் பெயரிடப்பட்டமை தொடர்பான அவரது பங்களிப்பு நன்றியுடன் நினைவுகூரப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு, இரு அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதுடன், மாகாண ஆட்சி முறைமைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தொடர்ச்சியான உரையாடல்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments