Thursday, October 29, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் பெண் உட்பட மூவர் கைது!

கனடாவில் பெண் உட்பட மூவர் கைது!

கனடாவின் ஆல்பெர்ட்டா கிராமப் பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக கனடிய அரச உயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சுமார் மூன்று மாத கால தீவிர விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் திகதி அதிகாலை 3:30 மணியளவில் அத்தாபாஸ்கா பகுதியில் உள்ள பொலிஸாருக்கு அனாமதேய தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஒருவர், தான் கடத்தப்பட்டு காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், ‘காலிங் லேக்’ பகுதிக்குச் சென்று சோதனையிட்டபோது, எட்மண்டன் பகுதியில் திருடப்பட்ட வாகனம் ஒன்று தாக்குதலுக்குள்ளான அடையாளங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் இருந்து சிறுவன் ஒருவனின் உடலங்களை பொலிஸார் மீட்டனர்.

மறுநாள் நடத்தப்பட்ட உடற்கூறாய்வுப் பரிசோதனையில், உயிரிழந்தவர் எட்மண்டன் பகுதியைச் சேர்ந்த 12 வயதான ஃபைசல் ஹுசைன் என்பதும், அவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டது.

அக்டோபர் 24 அன்று எட்மண்டனில் உள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் 9-ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments