இஸ்ரேலில் இன்று (27) 26ஆவது பாராளுமன்றத் தேர்தல் (26th Knesset Election) நடைபெறுகிறது.
இந்நிலையில், வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தால், இரவு 10 மணிக்கு பின்னரும் வாக்குச்சாவடிகள் திறந்திருக்கும் என மத்திய தேர்தல் குழுவின் பதில் தலைமை இயக்குநர் டீன் லிவ்னே தெரிவித்துள்ளார்.
அதிகளவிலான வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது நீண்ட வரிசைகள் ஏற்படுவது இயல்பானது எனக் குறிப்பிட்ட அவர், இரவு 10 மணிக்குள் வரிசையில் வந்த அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும் என்றும் உறுதியளித்தார்.
இதனால், வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வழக்கமாக வெளியிடப்படும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


