Tuesday, October 13, 2026
spot_img
Homeகனடா செய்திகள்Toronto –Danforth தொகுதியில் கடும் தேர்தல் போட்டி

Toronto –Danforth தொகுதியில் கடும் தேர்தல் போட்டி

Toronto நகரசபைத் தேர்தலில், Toronto –Danforth தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

26ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில், Diane Saxe, Mary Fragedakis மற்றும் Sara Erhhardt ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

2003ஆம் ஆண்டு முதல் இத்தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய Paula Fletcher இம்முறை போட்டியிடவில்லை. அவர், Toronto மாவட்டப் பாடசாலைச் சபையின் (TDSB) முன்னாள் உறுப்பினரான Sara Erhhardt இற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Sara Erhhardt, வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துதல், Metrolinx Ontario line திட்டத்தின் கட்டுமானப் பணிகளால் ஏற்படும் சவால்களைக் கையாளுதல் மற்றும் மக்களின் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

Mary Fragedakis, முன்னாள் நகரசபை உறுப்பினராவார். பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், பொது இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நகரசபை உறுப்பினரான Diane Saxe, இம்முறை வேறு தொகுதியில் போட்டியிடுகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மலிவு விலை வீடமைப்பு ஆகியவை அவரது முக்கிய முன்னுரிமைகளாகும். Metrolinx Ontario line புகையிரத நிலையங்களைச் சுற்றியுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் புதிய வீடுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, வேட்பாளர்களின் மக்கள் செல்வாக்கும் ஏற்கெனவே உள்ள அரசியல் அனுபவமும் தேர்தல் முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். பல அனுபவமிக்க வேட்பாளர்கள் போட்டியிடுவதால், Toronto –Danforth தொகுதியின் தேர்தல் முடிவுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments