பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குசல் மெண்டிஸ் தலைவராகச் செயல்படும் இந்த குழாமில் அஞ்சல பண்டார, தனது அறிமுக டெஸ்ட் அழைப்பைப் பெற்றுள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–2027 இன் ஒரு பகுதியாக இத்தொடர் இடம்பெறவுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது.
அதற்கமைய 15 பேர் கொண்ட இலங்கை குழாமில் பின்வரும் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குசல் மெண்டிஸ் – தலைவர்
பெதும் நிஸ்ஸங்க
பசிந்து சூரியபண்டார
தினேஷ் சந்திமால்
கமிந்து மெண்டிஸ்
சொனால் தினுஷ
தனஞ்சய டி சில்வா
அஞ்சல பண்டார
கேஷார நுவந்து
பிரபாத் ஜயசூரிய
மிலான் ரத்நாயக்க
லஹிரு குமார
அசித பெர்னாண்டோ
தில்ஷான் மதுஷங்க
எஷான் மாலிங்க


