விஜய் ஆண்டனி நடித்துள்ள அப்பாக்குட்டி படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 16ம் தேதி வெளியாகவிருந்த படம், ஒத்திவைக்கப்பட்டு நவம்பர்.6ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகிறது.
மு. மாரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


