Sunday, October 11, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடா மீது தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் இரண்டு விடயங்கள்

கனடா மீது தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் இரண்டு விடயங்கள்

Bank of Canada says aging population, low immigration reshaping economy: புலம்பெயர்தலும், வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பும், கனடாவின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்க உள்ளதாக கனடா வங்கி தெரிவித்துள்ளது.

கனடாவில் குறைந்துவரும் புலம்பெயர்தல் உட்பட இரண்டு விடயங்கள் நாட்டின் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்த இருப்பதாக கனடா வங்கி தெரிவித்துள்ளது.

இந்த தசாப்தத்தின் முதல் பாதியில் கனடாவின் மக்கள்தொகையில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சி, கனடாவுக்கு புதிய பணியாளர்களைக் கொடுத்தது, அது, கனடாவில் பணியாளர் தட்டுப்பாடு குறைய உதவியது என்கின்றன கனடா வங்கி மேற்கொண்ட ஆய்வொன்றின் முடிவுகள்.

அதே நேரத்தில், வீடுகள் மற்றும் அரசு உதவி போன்ற விடயங்களில் இந்த மக்கள்தொகை அதிகரிப்பால் அழுத்தம் அதிகரித்தது என்கிறது கனடா வங்கியின் ஆய்வறிக்கை.

அதைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு, ஃபெடரல் அரசு புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடிவு செய்ய, 2025இல் மக்கள்தொகை 0.5 சதவிகிதம் குறைந்தது.

வரும் ஆண்டுகளில், கனடாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை மேலும் குறையும்.

அதே நேரத்தில், இரண்டாவதாக இன்னொரு விடயமும் நடைபெற உள்ளது.

அதாவது, கனேடியர்களுக்கு வயது அதிகரிக்கும். அதனால், வேலைக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை குறையும். அது, நாம் என்ன வாங்குகிறோம், பொருளாதாரத்தால் எவ்வளவு உற்பத்தி செய்யமுடியும் என்பதை பாதிக்கும்.

குறைவான எண்ணிக்கையில் புலம்பெயர்வோர் வருவதால், வீடுகள் தேவைக்கான அழுத்தம் குறையும். அதே நேரத்தில், பொருட்கள், சேவைகளுக்கான தேவையும் குறையும் என்பதால், கனடாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறையும்.

இதற்கிடையில், கனேடியர்களில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதுடன், இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின் பிறந்த, பேபி பூமர் என அழைக்கப்படும் தலைமுறையினர் அதிக அளவில் பணி ஓய்வு பெறுவார்கள்.

ஓய்வு பெற்றவர்கள் அதிகம் பயணம் செய்வதால், விமானம், தங்குமிடம் போன்ற சேவைகளுக்கான செலவு அதிகரிக்கும்.

அதே நேரத்தில், மருந்துகள், முதியோர்களை கவனித்துக்கொள்ளும் சேவைகளுக்கான தேவைகள் அதிகரிக்கும்.

வயதானதால் ஓய்வு பெறுவோரின் இடத்தை நிரப்ப, புதிதாக இளைஞர்களை வேலைக்கு எடுக்கவேண்டியிருக்கும்.

சில துறைகளில் பெருமளவில் பணியாளர் பற்றாக்குறை நிலவும் நிலையில், சிறந்த பணியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க, நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் ஊதியத்தை அதிகரிக்கவேண்டியிருக்கும். அதனாலும் விலைவாசி உயர்வும் பணவீக்கமும் ஏற்படும்.

ஆக மொத்தத்தில், குறைந்துவரும் புலம்பெயர்தலும், வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பும் கனடாவின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்க உள்ளன என்கிறது கனடா வங்கி!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments